ஓடுவது
சில வருடம் முன் நானும் என் நண்பன் லக்ஷ்மி நாராயணனும் Tom Hanks நடித்த Forrest Gump திரைப் படத்தைப் பார்த்தோம். நான் பிறப்பதற்கு முந்தின வருடம் வெளியான திரைப்படம். முழுக்க முழுக்க அமெரிக்கத்தனமான படம் என்று தோன்றியது இருந்தாலும் எங்களுக்கும் டாம் ஹாங்க்ஸை பிடித்துப்போனது. படம் முழுக்க அவர் ஓடிக்கொண்டே இருப்பார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அது நல்ல கலைப்படமா என்பது பற்றி இல்லை. அவர் கதாபாத்திரத்தின் கல்லமின்மையும் அவன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். நா…