| சரஸ்வதி ராம்நாத் |
சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்ப்பில் கோதானம் நாவல் வாசித்திருக்கிறேன். வாசிக்கும் போது மொழிபெயர்ப்பு பற்றியெல்லாம் கவனம் இல்லாத வாசிப்பு காலம். நூலை கைகளில் எடுத்தவுடன் நேரே கதையை ஆரம்பித்து வாசிக்கும் பழக்கம். அவருடைய மொழிபெயர்ப்பு நாவல்கள் முழுவதையும் வாசிக்க வேண்டும்.
சென்ற ஆண்டு (செப்டம்பர் 7, 1925 ) சரஸ்வதி ராம்நாத்துக்கு நூற்றாண்டு நிறைவு. வாழ்க்கையில் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆளுமைகளில் ஒருவர். எழுத்தாளர் பாவண்ணன் அவரை பற்றித் தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி வந்திருக்கிறார். இந்த ஆவணப்படத்திலும் அவருடைய எழுத்து வாழ்க்கை பற்றி பாவண்ணனும், தனி வாழ்க்கை பற்றி சரஸ்வதி ராம்நாத்தின் மகன் ரகுநாதனும் பேசியிருக்கிறார்கள். ஆவணப்படம் அழகிய கருப்புவெள்ளை படங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.