அறிமுகம்


இயற்பெயர்: ராமானுஜம், (16-11-1995) பிறந்தது புதுக்கோட்டை, தற்போது சென்னையில் வசிக்கிறோம். அப்பா பாபு  தற்போது கோவில் அர்ச்சகராக இருக்கிறார், அம்மா தேவகி, இளையவன் நாராயணன். அப்பாவின் பூர்வீக ஊர் காஞ்சிபுரம். அம்மா வழியில் சமயபுரம். நான் சேலையூர் அஹோபில மடம் வேத பிரபந்த பாடசாலையில் கிருஷ்ண யஜுர் வேதம் பயின்றேன் (2003- 2011). தற்போது வைதீகம் செய்து வருகிறேன். ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சாரியர் எனது வேத ஆசிரியர். சம்ஸ்கிருத ஆசிரியர் ரங்கநாத சர்மா, தமிழ் ஆசிரியர் புலவர் ஶ்ரீராமன். பாடசாலையிருந்து வெளிவந்த காலகட்டத்தில் தான் அருகில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்.

2014ஆம் ஆண்டு குங்குமம் வார இதழில் வெளியான எழுத்தாளர்  ஜெயமோகனின் பேட்டியின் மூலம் அவர் வலைதளம் அறிமுகமானது, அப்போது வெண்முரசு வெளிவந்து கொண்டிருந்தது. அதன் வழி நவீன தமிழ் இலக்கியம் அறிமுகமானது. ஜெயமோகனுடன் கடிதத் தொடர்பும் ஏற்பட்டது.  'அனங்கன்' ஜெயமோகன் இட்ட பெயர். அதன் பின்னர் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். இந்தக் காலத்திலேயே எனது இருசக்கர வாகனத்திலும் ரயிலிலும் இந்தியாவின் பெரும்பாலான பண்பாட்டுத் தளங்களுக்குப் பயணித்தேன்.  அது எனக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்கியது. தற்போது நண்பர்களுடன் இணைந்து குருகு என்னும் மின்னிதழை 2023ம் ஆண்டு முதல் நடத்துகிறோம்.  நான் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள்  வெளியாகி வருகிறது .

ananganwriter@gmail.com

அனங்கன்