காஞ்சி மாநகர்
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்- திருவெஃகா காஞ்சிபுரம் என்னுடைய பூர்வீக ஊர். என்னுடைய முன்னோர்கள் காஞ்சியிலும் மகாபலிபுரத்திலும் வாழ்ந்துள்ளனர். காஞ்சி திருவெஃகா (யதோக்தகாரி பெருமாள்) கோவிலில் எங்களுக்கு பல கைங்கர்ய முறைகள் இருந்துள்ளன. அப்பாவுடைய அப்பா கடைசியாக பெருமாளின் திருவாபரணங்களை பாதுகாத்து உற்சவ காலங்களில் அலங்காரத்திற்கான ஆபரணங்களை எடுத்தளிக்கும் பொறுப்பில் இருந்துள்ளார். மகாபலிபுரம் ஸ்தலசயன பெருமாள் திருக்கோவிலில் இப்போதும் தீர்த்த முறையும் முதல் மரியாதையும் எங்கள் வம்சத்தைச் சேர்ந்தவர…